பக்கம்:வழிகாட்டி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 131

"எங்கேயானாலும் சரி; அவனைக் கண்டு வணங்கிப் போற்றி வழிபட்டு வாழ்த்தினால் உனக்கு இன்பம் உண்டாகும்’ என்று முடிக்கிறார். -

இனி முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களைப் பற்றி நக்கீரர் கூறுவதைக் கேட்கலாம்.

முருகன் உறையும் இடங்கள் குறிப்பிட்ட சில தலங்களில் மாத்திரம் முருகனை மக்கள் வழிபடுகிறார்கள் என்று நினைக்கக்கூடாது. மனிதர் தொகுதி எங்கெல்லாம் வாழ்கின்றதோ அங் கெல்லாம் அவன் இருந்து துணைசெய்கிறான். ஊர் தோறும் தமிழ்நாட்டில் முருகனுக்கு விழா எடுப் பார்கள். உற்சாகமும் சிறப்பும் மிகுந்த அந்த விழாக்களில் முருகனை வழிபடும் முறை ஒன்று உண்டு. குறிஞ்சி நிலத் தெய்வமாகிய அவனுக்குக் கூடை நிறையத் தினையரிசியை வைத்து வழிபடுவார்கள். பேரழகனா கிய அவனை நினைந்து பல பல மலர்களைக் கலந்து வைப்பார்கள். ஆட்டை அறுத்துப் பலியிடுவார்கள். விழா நடக்கும் இடத்தை முருகன் தன் திருவிருக்கை யாகக் கொள்வான் என்ற உறுதி அவர்களுக்கு உண்டு.

முருகனுக்குப் பெருவிழா நடக்கிறது என்பதற்கு அடையாளமாக முதலில் அவ்விடத்தில் கோழிக் கொடியை நிறுவுவார்கள். தினையும் மலரும் வைத்து மறியறுத்துக் கும் பிடும் ஊர் விழாக்களில் மனிதர் களுடைய அன்புக்கு அடிமையாகி முருகன் எழுந்தருள்

@) HTööT.

இது ஊரில் யாவரும் கலந்து ஒன்றுபட்டு விழா அயரும் களம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/133&oldid=643783" இலிருந்து மீள்விக்கப்பட்டது