பக்கம்:வழிகாட்டி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வழிகாட்டி

சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும். (சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து, ஆட்டை அறுத்து, கோழிக் கொடியோடு விழா வுக்குரிய களத்தை நிறுவி, ஒவ்வோரூரிலும் நடத்த மேற்கொண்ட சிறப்புப் பொருந்திய விழாக்களிலும்.)

இப்படிப் பொதுவகையால் பலர் சேர்ந்து விழா அயரும் இடத்தில் முருகன் எழுந்தருள்வது பொதுவான அருட்பொலிவு. அவன்பால் பித்துடையராகி இருக்கும் ஆர்வலர் பலர், அவனே எல்லாம் என்று நின்று வழி படுவார்கள். அவ்விடத்தில் அவன் சிறப்பான அருளைப் புரிவான். ஊரினருடைய விழாவில் அவன் ஊர்த்தெய்வமாக இருப்பான் ஆர்வலர் வழிபாட்டில் அவன் உள்ளத்துறை தெய்வமாக விளங்குவான்.

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினம்.

(அன்பர்கள் துதித்து வழிபட விரும்பிச் செல்லும் அவ்விடங்களிலும்.) -

விழாவயர் களத்திலும் ஆர்வலர் ஏத்தும் நிலை யிலும் எழுந்தருளும் முருகன், பூசாரி செய்யும் பூசை யையும் ஏற்றுக்கொண்டு அவன் வெறியாடும் இடத் திலும் இருக்கிறான். மறியறுத்து வேலைக் கையில் எடுத்து ஆடும் பூசாரியின் ஆட்டத்துக்கு வெறியாட்டு என்று பெயர். குறிஞ்சி நிலத்து மக்கள் முருகனை வழி பட்டு வெறியாட்டெடுப்பர். அவர்கள் வழிபடும் திருக் கோயிற் பூசாரி, வேலன். அவன் பூசை போட்டு வெறி அயரும் களத்திலும் முருகன் எழுந்தருளியிருப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/134&oldid=643786" இலிருந்து மீள்விக்கப்பட்டது