பக்கம்:வழிகாட்டி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 133

வேலன் தைஇய வெறிஅயர் களனும். (பூசாரி அமைத்த வெறியாடுகிற இடத்திலும்.) மனிதர் கூடி வழிபடும் இடங்களில் மாத்திரந்தானா முருகன் இருக்கிறான்? அழகு எங்கெல்லாம் உண்டோ, அங்கெல்லாம் அவன் கோயில் கொண்டிருப்பான். இயற்கை எழில் நிலவும் இடங்களெல்லாம் அவன் திருக்கோயில்களே. அழகுணர்ச்சியால் மனிதன் அமைத்த அழகுறையிடங்களெல்லாம் அவன் ஆலயங் களே. மரமடர்ந்து விலங்குகள் பயிலும் காடுகள் அவன் உறையும் இடங்களே. மனிதர் ஆக்கிய அழகு பார்க்கும் சோலைகளும் அவனுக்குரிய இடங்களே. ஆற்றுக்கு நடுவே சிறு தீவாக எழிற்சோலை வளரும் இடமாக இருக்கும் அரங்கம் அவன் திருக்கோயிலே. உலகத் துக்கு நல்ல நீரை மலையிடைப் பிறந்து போந்து தந்து பயிர் விளைக்கும் ஆறு அவன் திருவருளாட்சிக்கு இடமாக விளங்கும். மனிதர் தாமே முயன்று வெட்டிய குளமும் அவன் இருக்கும் இடந்தான். இப்படி இயற்கையாகவும் செயற்கையாகவும் இன்பமும் அழகும் மலிந்து விளங்கும் வேறு பல இடங்களிலும் அவன் உறைவான்.

காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும். (காடும் சோலையும் அழகுடைய ஆற்றிடையி லுள்ள தீவும் ஆறும் குளமும் வேறு பல இடங்களும்.) மனிதர் தன்னை வழிபடக் கூடும் இடங்களில் அவன் நிலவுவது இருக்கட்டும். எங்கெல்லாம் மனிதர்கள் கூடுகிறார்களோ, இயங்குகிறார்களோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/135&oldid=643787" இலிருந்து மீள்விக்கப்பட்டது