பக்கம்:வழிகாட்டி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வழிகாட்டி

அங்கெல்லாம் அவன் உறைவான். இயக்கம் முருகன் அருளால் நிகழ்வது. மனிதர் உயிர் வாழ்வதற்கே அவன் காரணம். ஆதலால் மனிதர் கூடும் இடங்களும் நடந்து பழகும் இடங்களும் முருகு கமழும் இடங்களே.

பேரூர்களில் பல பல தெருக்கள் ஒன்று கூடும் இடங்கள் பல இருக்குமல்லவா? அங்கெல்லாம் முருகனது சாந்நித்தியம் இருக்கும். நான்கு தெருக்கள் கூடும் சதுக்கமும், மூன்று தெருக்கள் கூடும் சந்தியும், ஐந்து முதலிய தெருக்கள் கூடும் சந்திகளும் முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களே.

முருகன் கடம்பமலர் மாலையை அணிந்தவன் என்பது எல்லோரும் அறிந்துகொண்ட உண்மை. அதை அணிவதோடல்லாமல் புதிய மலர்கள் மலர்ந்து நிற்கும் கடம்ப மரத்திலே அவன் எழுந்தருளியிருக்கிறான்.

சிறிய ஊர்களில் பழைய மரமும் அந்த மரத்தடியில் மேடையும் இருக்கும். அந்த இடங்களில் ஊர்க்காரர்கள் கூடி நியாயம் பேசுவார்கள். தமிழ்நாட்டில் இத்தகைய இடங்கள் பல இருந்தன. அவற்றிற்கு மன்றம் என்று பெயர். தொன்றுதொட்டு ஊரில் நீதி வழங்குவதற்கு இடமாக இருக்கும் அவ்விடம், முருகன் திருக்கோயி லுக்குச் சமானமானது. அங்கே முருகன் எழுந்தருளி யிருப்பான். இப்படியே நகருக்குள்ளே பலரும் கூடும் சபை பல உண்டு. பொதியில் என்று அவற்றிற்குப் பெயர். பலருக்கும் பொதுவான இல் ஆதலில் அந்த அம்பலங்களுக்குப் பொதியில் (பொது இல்) என்ற பெயர் வந்தது. அங்கும் முருகன் எழுந்தருளியிருப் i || TGAT.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/136&oldid=643790" இலிருந்து மீள்விக்கப்பட்டது