பக்கம்:வழிகாட்டி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 135

பல இடங்களில் கட்டுத்தறியை நட்டு அதனையே தெய்வமாக வழிபடுவார்கள். அவ்விடத்திலும் முருகன் இருப்பான்.

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும், (நான்கு தெருக்கள் கூடும் சதுக்கத்திலும் வேறு சந்திகளிலும் புதிய மலர்களையுடைய கடம்ப மரத் திலும் மன்றத்திலும் பொதியிலிலும் கந்தையுடைய இடங்களிலும்.

கந்துடை நிலை என்பதற்கு, ஆதீண்டு குற்றியை யுடைய இடத்திலும் என்று பொருள் எழுதுவர் நச்சினார்க்கினியர்.)

சிற்றுரிலும் பேரூரிலும் இயற்கையெழில் உள்ள இடத்திலும் செயற்கையெழில் அமைந்த இடத்திலும் மக்கள் ஒற்றுமைப்பட்டுக் கூடி வாழும் இடத்திலும் நடந்து செல்லும் வழிகளிலும் முருகன் இருப்பான். முருகன் ஒற்றுமைத் தெய்வம், உயிர் வாழ்க்கைத் தெய்வம், அழகுத் தெய்வம், நாகரிகத் தெய்வம் என்பதையே அவன் உறையும் இடங்கள் இவை என்பதன் வாயிலாகப் புலவர் அறிவுறுத்துகிறார்.

குறமகள் வழிபாடு மலைச்சாரலை அடுத்த ஊர் அது. அங்கே அதைப் போலப் பல சிற்றுார்கள் உண்டு. அந்த ஊரில் முருகனுக்குக் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தக் கடவுள் படிமத்தானுடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போலக் குறமகள் வெறியாடுவதையும் ஏற்றுக் கொண்டு பிரசன்னமாவான். முருகனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/137&oldid=643792" இலிருந்து மீள்விக்கப்பட்டது