பக்கம்:வழிகாட்டி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வழிகாட்டி

உவந்த பண்டங்களை வைத்து மந்திரங்கூறி ஆடிப் பாடித் தெய்வ ஆவேசம் வந்து குறிஞ்சிநில மக்களுக் குத் தெய்வ நம்பிக்கையை ஊட்டுபவள் அந்தக் குறத்தி. வெறியாடுவதால் அவளுக்கு வெறியாட்டியென்ற பேர் வழங்கும். தேவராட்டியென்றும் சொல்வதுண்டு. அவள் முருகனுக்குப் பூசை போடுகிற காட்சியை அடுத்தபடி நக்கீரர் வருணிக்கிறார். - முருகனுடைய விழாவென்றால் முதலில் துவஜா ரோகணம் நடைபெறுகிறது. அழகிய கொண்டையோடு கூடிய சேவற்கொடி அது. மாட்சிமைப்பட்ட தலையை யுடைய சேவற்கொடியை நாட்டிக் கோயிலைப் புதுக்கி அலங்கரிக்கிறார்கள். திருவிழாவுக்குப் பொருத்தமான அமைப்புக்களை அமைக்கிறார்கள்.

மாண்டலைக் கொடியோடு மண்ணி அமைவர.

(மாட்சிமைப்பட்ட தலையையுடைய கோழிக் கொடியோடு பிற அலங்காரங்களையும் செய்து பொருத்தமாக அமையும்படி.

ஆண்டலைக் கொடி என்று பிரித்து, பேய் முதலி யவை வராமல் இரட்சையாக இருக்கும் படியாக ஆடவனது தலையும் பறவையினது உடம்பும் உடைய உருவத்தை எழுதிய கொடி எனப் பொருள் கொள்வதும் உண்டு.) -

தெய்வ சாந்நித்தியம் இருக்கும்பொருட்டு நிலை, வாயிற்படி முதலிய இடங்களில் வெண்சிறு கடுகை அரைத்து அதனோடு நெய்யையும் கலந்து தடவுவது பழங்கால வழக்கம். முருகன் திருக்கோயிலில் நெய் யோடு ஐயவியை அப்புகிறார்கள். அப்பும் போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/138&oldid=643795" இலிருந்து மீள்விக்கப்பட்டது