பக்கம்:வழிகாட்டி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 137

மெல்ல மந்திரங்களைச் சொல்கிறார்கள். கையைக் குவித்து அந்த அந்த இடத்துக்குக் கும்பிடு போடு கிறார்கள். நிலை, வாயிற் படி, சுவர், திருவாயில் முதலிய இடங்களெல்லாம் தெய்வம் உறையும் இடங்கள். அங்கெல்லாம் நெய்யையும் வெண்சிறு கடுகையும் அப்பி மந்திரம் சொல்லிக் கும் பிட்டு அழகிய மலர்களையும் தூவித் திருக்கோயிலைக் கோலம் செய்கிறார்கள்.

குறமகள் நீராடி வந்து வெவ்வேறு நிறமுள்ள இரண்டு ஆடைகளை உள் ஒன்றும் புறம்பொன்றுமாக உடுத்துக் கொள்கிறாள். பிறகு சிவந்த நூலைக் கையிலே காப்பாகக் கட்டிக்கொள்கிறாள். பூசைக்கு வேண்டிய பொருள்களெல்லாம் குறைவற நிரம்பியிருக் கின்றன். காப்புப் புனைந்த குறமகள் முருகனை வருவிக்க, ஆவேசரூபமாக வருவிக்க, வேண்டிய காரி யங்களைச் செய்யத் தொடங்குகிறாள்.

வெள்ளைப் பொரியைத் தூவுகிறாள். பலம் பொருந்திய கொழுத்த கால்களைப் பெற்ற ஆட்டுக் கிடாயின் இரத்தத்தோடு நல்ல வெள்ளை அரிசியைக் கலந்து பலிபீடத்தில் இடுகிறாள். இது சிறு பலி. கூடை களில் வேறு அரிசியை வைக்கிறாள். இது பிரப்பெனப் படும். பசு மஞ்சளை அரைத்துச் சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களோடு அங்கங்கே தெளிக்கிறாள். மலைச்சாரலில் செவ்வலரிச் செடி வளப்பமாக வளர்ந் திருக்கிறது. பெரிய பெரிய மலர்களையுடையதாக இருக்கிறது. அந்த மலர்களிலே ஒரு தனி வாசனை உண்டு. அவற்றைப் பறித்துக் காட்டி, ஒத்த அளவிலே நறுக்கி எங்கும் தொங்கவிடுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/139&oldid=643798" இலிருந்து மீள்விக்கப்பட்டது