பக்கம்:வழிகாட்டி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வழிகாட்டி

நெய்யோடு ஐயவி அப்பி ஐதுஉரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய துவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சுளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றி. (நெய்யோடு கலந்து வெள்ளைக் கடுகை அப்பி மந்திரங்களை மெல்லச் சொல்லிக் கும் பிட்டுக் கொழுவிய மலர்களைத் தூவி, ஒன்றோடு ஒன்று மாறு பட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளை ஒருங்கே உடுத்து, சிவந்த நூலைக் கையிலே கட்டிக்கொண்டு, வெள்ளிய பொரியைச் சிதறி, மிக்க வலிமை நிலை பெற்ற பெரிய காலையுடைய கொழுத்த ஆட்டுக்கிடா யின் இரத்தத்தோடு கலந்த தூய வெள்ளை அரிசியைச் சிறு பலியாக இட்டு, பல கூடை நிறையப் பிரப்பரிசி வைத்து, சிறிய பசுமஞ்சளோடு நறிய வாசனைப் பொருள்களைத் தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வலரி யினது நறிய தண்ணிய மாலையை அளவு ஒத்து அறும் படியாக அறுத்து, அங்கங்கே தொங்கும்படி கட்டி.

குடந்தம் படுதல் - கைகுவித்தல். முரண் - வேறு பாடு. மத வலி - மிக்க வலிமை. விடை - இங்கே ஆட்டுக்கிடாய். இரீஇ - இருத்தி. விரை - வாசனைப் பண்டம். கணவீரம் - செவ்வலரி.)

மக்கள் யாவரும் துன்பம் ஒழிந்து இன்பத்தோடு வாழவேண்டுமென்பதற்காகத்தான் குறமகள் முருகனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/140&oldid=643799" இலிருந்து மீள்விக்கப்பட்டது