பக்கம்:வழிகாட்டி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+4O வழிகாட்டி

கின்றன. ஆடலும் பாடலும் துடியின் முழக்கமும் சாமான்ய மனிதனுக்கே ஆவேசத்தை உண்டாக்கும். உலக நினைவே இல்லாமல் தெய்வ நினைவாக உள்ள அந்தப் பரப்பில் முருகன் எழுந்தருளத் திருவுள்ளம் கொள்கிறான்.

ஆம், குறமகள் மூலமாக அவன் வெளிப்படு கிறான். அவளுக்கு ஆவேசம் வருகிறது. உடல் நடுங்க ஆடிக் கூவிச் சுழன்று சிரித்து முழங்குகிறாள். அங்குள்ள மக்கள் அத்தனை புேருக்கும் மெய் சிலிர்க்கிறது. சிலர் அழுகிறார்கள். சிலர் தொழுகிறார்கள். சிலர் பிரமித்து நிற்கிறார்கள். முருகனே நேரில் வந்துவிட்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது அந்த இடம். தெய்வம் இல்லை என்ற எண்ணமுள்ள முரடர்கள்கூட இந்தக் காட்சிகளைக் கண்டுவிட்டு நெஞ்சு படபடக்கக் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். முரண்பாட்டை யுடைய அவர்கள்கூட அஞ்சும்படியாக அந்தக் குறமகள் முருகனை வருவித்திருக்கிறாள்.

உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர், (பல நிறங்களையுடைய மலர்களைத் தூவி, கண்டோர் அஞ்சும்படியாக இரத்தத் தோடு கலந்த சிவந்த தினையைப் பரப்பி, குறமகளானவள் முருக னுக்கு உவந்த வாத்தியங்களை வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லையென்ற முரண்பட்ட கொள்கையை உடையோரும் அஞ்சும்படியாக முருகனை வரும்படிச் செய்த அழகுமிக்க அகன்ற திருக்கோயில்லில்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/142&oldid=643805" இலிருந்து மீள்விக்கப்பட்டது