பக்கம்:வழிகாட்டி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 141

இத்தகைய அற்புதமான காட்சிகளை உடைய கோயிலில் வெறியாட்டெடுக்கின்ற இடத்தில் பல பாட்டுக்களைப் பாடுகிறார்கள் குறிஞ்சி நில மக்கள். அந்தப் பாட்டொலி மலையெல்லாம் சிலையோடு கிறது. பல கொம்புகளை ஊதுகிறார்கள். கேட்டால் கிடு கிடுக்கும் ஒலியையுடைய கொடிய மணிகளை முழக் குகிறார்கள். பிறகு முருகனுடைய வாகனத்தை வாழ்த்து கிறார்கள். பகைவர்களுக்கு முன் நின்று முருகன் போர் செய்கையில் எத்தகைய ஆற்றலுடையவர்கள் எதிர்த் தாலும் புறங்காட்டி ஓடாதது அந்த வாகனம்; அதுதான் பிணிமுகம் என்னும் யானை. அதை வாழ்த்துகிறார்கள்.

ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி. (வெறியாடுகின்ற இடத்தில் சிலையோடும்படி யாகப் பாடி, பல கொம்புகளை ஒன்றாக ஊதி, ஒலியாற் கொடுமையையுடைய மணிகளை ஒலித்து, புறங்காட்டி ஓடாத வலிமையையுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி.)

ஊர்கள்தோறும் நடைபெறும் விழாக்களிலும், இயற்கையழகும் செயற்கையழகும் நிரம்பிய இடங் களிலும், வேலன் வழிபடும் களத்திலும், குறமகள் பூசை செய்யும் கோயிலிலும், பிற பிற இடங்களிலும் முருகனைப் பல வகையான மக்கள் வழிபடுகிறார்கள். தங்கள் குறை தீரவேண்டியும், ஊருக்கு நன்மை வர வேண்டியும், அறம் பொருள் இன்பம் வீட்டை விரும்பி யும் அவர்கள் வழிபடுகிறார்கள். இப்படி விரும்பி வழி படுபவர்கள் எல்லாம் தங்கள் இயல்புக்கு ஏற்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/143&oldid=643807" இலிருந்து மீள்விக்கப்பட்டது