பக்கம்:வழிகாட்டி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 145

ளுடைய ஞான திருஷ்டியால் அந்தக்கரு தேவர் படைத் தலைமை வகிக்கும் தன்மையதென்று உணர்ந்து, தம் மனைவியரிடம் கொடுக்க எண்ணினார்கள். ஆயினும் அதன் ஆற்றலை அவர் தாங்கார் என்று கண்டு, வேள்வித் தீயிலே பெய்தார்கள். அந்தத் தீயின்கண் வெந்து செவ்வி பெற்றதைத் தங்கள் மனைவியருக்குக் கொடுத்தார்கள். அவருள் வசிட்டன் மனைவி அருந்ததி யைத் தவிர மற்ற ஆறு பேராகிய கார்த்திகை மாதர் அதன் பகுதியை நுகர்ந்து கருவடைந்தனர். அப்பால் ஆறு குழந்தைகளை ஈன்று, சரவணப் பொய்கையில் உள்ள தாமரை மலராகிய தொட்டிலில் விட்டனர்.

வால்மீகி ராமாயணம், குமார சம்பவம் முதலிய பழைய நூல்களில் முருகனுடைய திருவவதாரம் இதை யொத்தே அமைந்துள்ளது. தமிழ்க் கந்தபுராணமும் பிறவும், இறைவன் திருமுகங்களிலுள்ள நெற்றிக் கண் களிலிருந்து பிறந்த பொறிகளை அக்கினி ஏந்தி வாயு விடம் கொடுக்க, வாயு கங்கையில் விட, கங்கை சரவணப் பொய்கையில் விட்டாள்; அங்கே ஆறு பொறி களும் ஆறு குழந்தைகளாக உருப்பெற்று வளர்ந்து வந்தன. அந்தக் குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்த் தனர் கார்த்திகை மாதர் என்று கூறும்.

சிவபிரானுடைய ஆற்றலைப் பெற்ற அம்சம் முருகன், கார்த்திகை மாதருக்கு மகவாய் வளர்ந்தவன் என்ற செய்திகள் எல்லாக் கதைகளுக்கும் பொது வானவை. அக்கினியினால் தாங்கப் பெற்றதனால் அக்கினி குமாரன் என்றும், சரவணப் பொய்கையில் திருவவதாரம் செய்தமையால் சரவணபவன் என்றும், கார்த்திகை மாதரால் வளர்க்கப் பெற்றமையினால்

5u.5.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/147&oldid=643814" இலிருந்து மீள்விக்கப்பட்டது