பக்கம்:வழிகாட்டி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வழிகாட்டி

கார்த்திகேயன் என்றும் முருகனுக்குத் திருநாமங்கள் வந்தன.

முருகன் திருவவதாரத்தோடு சம்பந்தமுடைய திரு நாமங்கள் சிவகுமாரன், அக்கினிகுமாரன், சரவண பவன், கார்த்திகேயன் என்பன.

கார்த்திகேயன்

நக்கீரர் முதலில் புலவனுக்கு முருகன் திருவவ தாரத்தை நினைப்பூட்டுகிறார்.

முருகன் சிவபெருமானிடத்தில் தோன்றியவன். அவனுடைய அம்சம் வெளிப்பட அதனை முதலில் ஏந்திச் செவ்விபெறச் செய்தவன் அக்கினி. அக்கினி தாங்கித்தர, அப்பால் அதன் பகுதிகளைக் கார்த்திகை மாதர் தாங்கினர். அவர்கள் தாங்கிச் சூல் முதிர்ந்து கருவுயிர்த்து இமயமலைச் சாரலிலே உள்ள, தருப்பை அடர்ந்த பசிய சுனையாகிய சரவணப் பொய்கையிலே தாமரை மலர்களிலே விட்டார்கள். ஆதலால், 'ஐந்து பூதத்தலைவர்களுள் ஒரு வனாகிய அக் கினி தன் கையிலே ஏற்கவும், பிறகு ஆறு கார்த்திகை மாதர் பெறவும் ஆறு வடிவுடனே எழுந்தருளிய திருவருட் செல்வனே, கார்த்திகேயா என்று முருகனைப் போற்று (3) i fTliu ffa55.

நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

அறுவர் பயந்த ஆறமர் செல்வ!

(உயர்ந்த பெரிய இமாசலத்தின் உச்சியில் நீல நிறமுடைய தருப்பை வளர்ந்த பசிய சுனையிலே, ஐம்பூதத் தலைவருள் ஒருவன் தன் கையிலே ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/148&oldid=643815" இலிருந்து மீள்விக்கப்பட்டது