பக்கம்:வழிகாட்டி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 147

கொடுக்க, ஆறு முனிவருடைய மனைவியர் பெற் றெடுத்த ஆறு திருவுருவங்களோடு அமர்ந்த செல்வனே!

சிமயம் - சிகரம். நீலம் - தருப்பை.)

சிவகுமாரன்

தேவர்களெல்லாம் சூரனுடைய கொடுமைக்கு ஆற்றாமல் தம் வாழ்வை இழந்து கலங்கித் தவித் தார்கள். சிவபிரான் வடவாலின் கீழே தென்திசை நோக்கித் தவஞ்செய்து கொண்டிருந்தான். அப்பிரான் பார்வதியை மணந்து ஒரு திருமகனைத் தந்தருளினால் தம் துயர் நீங்குமென்று உணர்ந்த தேவர் காமனைக் கொண்டு தr)ணாமூர்த்தியின் தவத்தைக் கலைத்தனர். ஆல்கெழு கடவுளாகிய அவனே பார்வதியை மணந்து முருகன் திருவவதாரம் நிகழத் திருவருள் செய்தான்.

ஐவருள் ஒருவனாகிய அக்கினி ஏந்த, ஆறு மாதர் பெற்றெடுக்க வந்தவனெனில், முருகனுடைய பெருமை முற்றும் புலப்படாதோ என்று சந்தேகப் பட்டார் நக்கீரர். முருகன் இவ்வாறு திருவவதாரம் செய் தாலும், தான் அசையாவிடின் உலகமே அசையாதென் பதைக் காட்டும் திருக்கோலத்தில் மோனமுத்திரை யோடு வீற்றிருந்தருளும் சிவபிரானுடைய திருமகன் அவன் என்பதை உடனே நினைவுறுத்துகிறார்.

அவன் பரம யோகியாகிய தrவிணாமூர்த்தியின் புதல்வன். ஆதலால், 'ஆல்கெழு கடவுட் புதல்வ' என்று ஏத்துவாயாக.

ஆல்கெழு கடவுட் புதல்வ.

(ஆலமரத்தின் அடியிலே வீற்றிருக்கும் தகவினா மூர்த்தியின் திருமகனே!)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/149&oldid=643816" இலிருந்து மீள்விக்கப்பட்டது