பக்கம்:வழிகாட்டி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வழிகாட்டி

பார்வதி நந்தனன்

தrணாமூர்த்தி தானே முருகனை உண்டாக்கி விடவில்லை. சக்தனும் சக்தியும் சேர்ந்தால்தான் உலகுக்கு இன்பம் உண்டாகும். யோகி யோகியாகவே நின்றிருந்தால் உலகத்தில் இயக்கம் இல்லாமற் போகும். யோகி அருளுடையவனாகி, அந்த அருளே. உருவமாகிய தேவியோடு ஒன்றுபட்டால்தான் கருணை பெருக்கெடுத்து ஒடும்; உலகில் உயிர்ப்பயிர் விளையும். சிவபிரான் மலைமகளை மணந்து முருகனை ஈந்தா னென்பதன் கருத்து இதுதான். முருகன், ஆல்கெழு கடவுட் புதல்வன் மாத்திரம் அல்லன், மலைமகள் குமாரனும் ஆவான்; ஆகையால் அவனை, "பெரிய பக்க மலைகளையுடைய இமாசலத்தின் புத்திரியாகிய பார்வதியின் திருமகனே' என்று போற்றுவாயாக.

மால்வரை மலைமகள் மகனே! (பெருமையும் பக்க மலைகளையும் உடைய இமா சலத்தின் மகளுக்கு மகனே!

வரை - மலை; மூங்கிலடர்ந்த மலையென்றும் சொல்லலாம்.)

முருகன் பெருவீரன். தேவர்கள் தம் பகையைப் போக்கவேண்டும் என்று வேண்ட, அதனை நிறை வேற்றுவதையே தலைமையாகக் கொண்டவன். திருவவதாரம் செய்தபோதே தன்னை எதிர்த்த இந்திர னைப் புறங்காட்டி ஒடச் செய்தவன். யாராக இருந் தாலும் எதிர்ப்பாராயின் அவர்களுக்கு யமனாக இருப் பவன் அவன். ஆதலின், 'மாற்றோர் கூற்றே!' என்று புகழ்வாயாக. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/150&oldid=643817" இலிருந்து மீள்விக்கப்பட்டது