பக்கம்:வழிகாட்டி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வழிகாட்டி

இழைஅணி சிறப்பிற் பழையோள் குழவி! (ஆபரணங்களை அணிந்த பெருமையையுடைய பழையவளாகிய பராசக்தியின் குழந்தையே!)

தேவசேனாதிபதி முருகன் தேவர்களுக்குப் பாதுகாவலனாக இருப் பவன். தேவர் படைகளுக்குத் தலைவன். அவர்களுடைய வணக்கத்துக்கு அந்த வகையிலும் உரியவனாக இருப் பவன். அவன் திருக்கரத்தில் வேலோடு வில்லும் உண்டு. வானோர் வணக்கத்தை ஏற்றருளி, கோதண்டபாணி யாகக் காட்சி அளித்து, அவர்களுடைய சேனைக்குத் தலைமை பூண்டு விளங்கும் தேவசேனாதிபதி முருகன்.

வானோர் வணங்குவில் தானைத் தலைவ! (தேவர்கள் வணங்குகின்ற, வில்லைக் கையிலே பிடித்த படைத்தலைவனே! வணங்கு வில் என்று கூட்டி வளைந்த வில்லையுடைய என்றும் சொல்லலாம்.)

மாலை மார்பன் இன்பநிலை அருளும் முருகப்பிரான் என்றும் இன்ப நிலையிலே எழுந்தருளியிருக்கிறான். இல்லறத்தார் இன்பம் பெற்று வாழத் திருவருள் செய்பவன் அவன். தேவயானையையும் வள்ளியெம்பிராட்டியையும் மணந்து இன்பம் துய்ப்பவன். போகப் பொருளை வழங்குபவன் அவன். அவற்றை ஏற்றுக் கொள்பவனும் அவன். அழகும் இன்பமும் நிறைந்த அவன் திருமார்பில் கடம்ப மாலை புரள்கின்றது. போகத்துக்குரிய மாலை அது.

மாலை மார்ப!

(போகத்துக்குரிய மாலையை அணிந்த திருமார்பை உடையவனே!)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/152&oldid=643819" இலிருந்து மீள்விக்கப்பட்டது