பக்கம்:வழிகாட்டி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை i51

நூலறிபுலவன் முருகன் எல்லாம் அறிந்தவன். மெய்ஞ்ஞான பண்டிதன். ஞானமே திருவுருவாக உடையவன். சங்கத் தில் தமிழ்ப்புலவனாக வீற்றிருந்தவன். அகத்தியர் முதலியோருக்குத் தமிழை உபதேசம் செய்தவன். செந்தமிழ் நூல் விரித் தோன். 'சங்கத் தமிழின் தலைமைப் புலவா என்று குமரகுருபரர் அவனைப் பாராட்டுகிறார்.

நூல் அறி புலவ! (எல்லா நூல்களையும் அறியும் பேரறிவுடைய வனே!)

இதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கூறலாம். நூல் என்பது இலக்கணத்துக்குப் பெயர். தொல்காப்பியத்தில் இலக்கணத்தையே நூல் என்று வழங்குகின்றார் ஆசிரியர் தொல்காப்பியர். ஆகையால் இதற்கு, 'இலக்கணநூலை ஆராய்ந்து அறியும் புலவனே' என்றும் பொருள் கொள்ளலாம். சிறந்த புலவனென்று ஒருவனைச் சொல்ல வேண்டுமானால் அவன் இலக்கணத்தில் வல்லவனாக இருக்கவேண்டும். இலக்கணம் தெரியாதவர்கள் எத்தனை படித்தாலும், எங்கே தவறு செய்து விடுவோமோ என்ற பயம் உள்ளுற இருந்துகொண்டே இருக்கும். -

"எழுத்தறிவார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்' என்று சிவப்பிரகாச சுவாமிகள் சொல்லியிருக்கிறார்.

முருகன் வடமொழியில் ஒர் இலக்கண நூல் இயற்றியதாகவும், அதற்குக் கெளமார வியாகரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/153&oldid=643820" இலிருந்து மீள்விக்கப்பட்டது