பக்கம்:வழிகாட்டி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 153

பட்டிருக்கிறது. உங்களுக்கு அந்த அவசியம் இல்லை. உலகமெல்லாம் உங்களை ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறது. உங்களைப் பிரிவது எனக்குத் துயரத்தைத் தருவதானாலும் சுகமாக இருக்கவேண்டிய நீங்கள் அரைவயிறு உண்டு வாழ என் உள்ளம் இடம் கொடுக்க வில்லை. ஆதலால் தங்களுக்கு விருப்பமான இடங் களுக்குச் சென்று வாழுங்கள். இறைவன் திருவருளால் பழையபடி நாடு நல்ல நிலைக்கு வரும் போது உங்களையெல்லாம் அழைத்து வந்து மீண்டும் உங்கள் பழக்கத்தால் வரும் இன்பத்தை அடைவேன்' எனறான.

புலவர்கள் அதற்கு இணங்கிப் பல பல இடங் களுக்குச் சென்று வாழ்ந்து வந்தார்கள். இப்படிப் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. அந்தக் காலம் முழு வதும் மதுரையில் சங்கம் நடைபெறவில்லை. உணவுப் பஞ்சத்தைக் காட்டிலும் தமிழ்ப்பஞ்சம் பாண்டியனுக்கு மிகுதியான துன்பத்தை உண்டாக்கியது. பஞ்சம் நீங்கும் அறிகுறிகள் தோன்றியவுடன் முதல் காரியமாக அவ்வவ் விடங்களுக்கு ஆள்விட்டுப் புலவர்களையெல்லாம் அழைத்துவரச் செய்து உபசாரம் செய்யத் தொடங் கினான். r:

பஞ்சம் உண்டானபோது மதுரையை விட்டுப் போன புலவர்களில் சிலர் போன இடங்களில் பற்றுக் கொண்டு இருந்துவிட்டார்கள். ஆகவே, போனவர்கள் எல்லோரும் திரும்பிவரவில்லை. வந்த புலவர்களை உபசரித்து மீட்டும் சங்கத்தைக் கூட்டி யாதொரு குறைவு மின்றி நடைபெற்று வரும்படிச் செய்தான் பாண்டிய மன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/155&oldid=643822" இலிருந்து மீள்விக்கப்பட்டது