பக்கம்:வழிகாட்டி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வழிகாட்டி

-

தமிழிலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அந்த இலக் கணங்களைத் தனித்தனியே ஆராய்ச்சி செய்த புலவர்கள் இருந்தார்கள். பொருள் இலக்கணம் அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் இரண்டு பிரிவுகளை உடையது. எல்லா இலக்கணத்திலும் வல்ல புலவர்கள் சங்கத்தில் இருந்தார்கள். அகப்பொருள் இலக்கணத்தில் பொதுவாகத் தேர்ச்சி பெற்றவர்கள் இருந்தாலும், சிறப் பாக அதை ஆராய்ச்சி செய்து இலக்கணம் வகுக்கும் நிலையில் இருந்த புலவர்கள் இல்லை. மீட்டும் அந்தத் துறையிலே புகுந்து ஆராய்ந்து நூல் இயற்ற வல்லவர் களாகக் கூடும். ஆயினும் முன்பே அந்தத்துறையில் தீவிரமாகப் புகுந்து ஆராய்ந்து முடிவுகண்ட புலவர்கள் பஞ்சத்தில் வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் வர வில்லை. தொல்காப்பியத்தில் அகப்பொருள் இலக் கணம் இருந்தாலும் தனியே அகப்பொருள் பற்றி ஓர் இலக்கணம் புலவர்களைக் கொண்டு வகுக்கவேண்டும் என்று பாண்டியன் எண்ணியிருந்தான். இடையிலே பஞ்சம் வரவே, அவன் கருத்து நிறைவேறவில்லை. பஞ்சம் தீர்ந்த பிறகோ புலவரைக் காணவில்லை.

அகப்பொருள் தமிழுக்கே சிறப்பாக அமைந்த ஒன்றென்று புலவர்கள் சொல்வார்கள். பிற மொழி களில் அகப்பொருளிற் சொல்லப்பெறும் காதலைப் பற்றிய துறைகள் இருந்தாலும், இலக்கண வரையறை யோடு அதனை ஒழுங்குபடுத்திய சிறப்பு, தமிழுக்கே உரியது என்பது அவர்கள் கருத்து. அந்த இலக்கணத் தைச் சிறப்பாக ஆராய்ச்சி செய்துவைத்தவர்கள் வராதது பாண்டியனுக்குக் குறையாக இருந்தது. தமிழுக்கே பெருமை தரும் அந்தப் பகுதி இல்லாமல் மற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/156&oldid=643823" இலிருந்து மீள்விக்கப்பட்டது