பக்கம்:வழிகாட்டி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 155

பகுதிகள் மாத்திரம் இருந்தால், தலை இல்லாத உடம்பு போல இருக்குமே என்று நினைத்தான்.

பாண்டியன் சிவபக்தன். மதுரையிலே திருக் கோயில் கொண்டிருக்கும் சோமசுந்தரக் கடவுளை மறவாமல் வழிபடுபவன்; இம்மைக்கும் மறுமைக்கும் அந்தப் பெருமானே தனித்துணைவன் என்பதை உறுதியாக நம்புகிறவன். ஆகையால் சோமசுந்தரக் கடவுளை அவன் தரிசிக்கும் போதெல்லாம், அகப் பொருள் ஆராய்ச்சியும் அகப்பொருள் நூல் செய்யும் ஆற்றலும் உள்ள புலவர் இல்லையே! என்ற வருத்தத் தோடு, 'புதிய அகப்பொருள் நூல் ஒன்று இயற்றுவார் கிடைக்கவில்லையே! என் விருப்பம் நிறைவேற வில்லையே! என்று முறையிட்டான்.

இப்படி இருக்கையில், இறைவன் எழுந்தருளிய இடத்தில் பீடத்தின் கீழே ஒருநாள் கோயிற் குருக்கள் சுத்தம் செய்தபோது ஏதோ சப்தம் உண்டாயிற்று. என்ன வென்று பார்க்கையில் தாமிரத் தகடுகளைப் போல இருந்தன. ஆம்; செப்பேடுகளே. அவற்றைக் குருக்கள் எடுத்துப் பார்த்தார். ஏதோ எழுதியிருந்தது. அதுகாறும் அவை அங்கே இருந்ததாகத் தெரியவில்லை. அன்று அவை கிடைத்தது அற்புதச் செயலாக இருந்தது.

இந்த அற்புதம் அரசன் காதுக்கு எட்டியது. திருக் கோயிலுக்கு வந்து அந்தத் தாமிரத் தகடுகளை எடுத்துச் சென்று தமிழ்ச்சங்கத்தில் வைத்துப் புலவர்களைக் கொண்டு ஆராயச் செய்தான். என்ன ஆச்சரியம்! அது ஓர் அகப்பொருள் இலக்கண நூலாக இருந்தது. அறுபது சூத்திரங்கள் அடங்கிய நூல். அது ஆலவாய்ப் பெரு மானே தன்முறையீட்டுக்குத் திருவுள்ளம் இரங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/157&oldid=643825" இலிருந்து மீள்விக்கப்பட்டது