பக்கம்:வழிகாட்டி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வழிகாட்டி

அதைத் தானே இயற்றி வழங்கினானென்று பாண்டியன் எண்ணினான். மற்றவர்களும் அப்படியே துணிந் தார்கள். பாண்டியனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவு ஏது? கூத்தாடிப் பாராட்டிச் சிவபிரானது கருணைத் திறத்தை வியந்து சோமசுந்தரக் கடவுள்முன் சென்று அடி வீழ்ந்து ஆடிப்பாடி உருகிப் புளகாங்கிதம் அடைந் தான்.

சூத்திர உருவத்தில் அமைந்த அந்த அகப்பொருள் இலக்கணம் ஆலவாய், இறைவனால் அளிக்கப்பட்ட மையின் அதற்கு இறையனார் அகப்பொருள் என்ற பெயர் அமைந்தது.

சுருங்கிய சூத்திர உருவத்தில் அமைந்த அந்த நூலுக்கு உரை எழுதினால்தான் யாவருக்கும் அது பயன் படும். ஆதலின் அந்த நூலுக்கு விரிவான உரை ஒன்று வேண்டுமென்று பாண்டியன் விரும்பினான். அவன் விருப்பத்தை நிறைவேற்றச் சங்கப் புலவர்கள் இருக்கும்போது என்ன குறைவு? நாற்பத் தொன்பது புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் கூடியிருக்கும்போது பாண்டியன் தன் கருத்தைத் தெரிவித்தான். அந்தப் புலவர்கள் அனைவரும் இறைவன் நூலுக்கு உரை எழுதுவதனைப் பெரும் பேறாக எண்ணி ஆர்வத்தோடு தொடங்கினார்கள்.

உரைகள் முற்றுப்பெற்றன. நாற்பத் தொன்பது பேரும் நாற்பத்தொன்பது உரைகள் எழுதினால் எதனைக் கொள்ளுவது? எதனைத் தள்ளுவது? புலவர்கள் அனை வரும் நல்லிசைச் சான்றோர்; தமிழறிவுக்கு எல்லை நிலத்தில் இருப்பவர்கள். அவர்கள் வகுத்த உரையை மதிப்பிட்டு, இதுவே சிறந்தது என்று சொல்லும் வன்மை யாருக்கு உண்டு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/158&oldid=643826" இலிருந்து மீள்விக்கப்பட்டது