பக்கம்:வழிகாட்டி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;58 வழிகாட்டி

ஆனந்தத்தை மெய்ப்பாடுகளால் வெளிப்படுத்தினான். அதனால், நக்கீரர் உரையே இறையனார் அகப் பொருளுக்குச் சிறந்ததென்று யாவரும் துணிந்தனர். அதுவே புலவர்களுக்கும் சம்மதமாயிற்று. அந்த உரையே அது முதல் தமிழ்நாட்டில் வழங்கிவரத் தொடங்கியது.

|வ்வாறு அகப்பொருள் இலக்கண நூலுக்கு எது ஏற்ற உரை என்று அறிந்து தெரிவிப்பதற்கு முருகன் ருத்திர ஜன்மனாக வந்து உதவினான். நக்கீரர் தம் சொந்த அனுபவத்தில் முருகன் இலக்கணத்தின் உரை யை ஆராய்ந்து தேரும் அறிஞனாக இருந்ததை உணர்ந் தவராதலின், அதனை நினைந்து, நூலறி புலவ என்று சொல்லியிருப்பது பொருத்தம் அல்லவா?

ஒரு தனி வீரன் முருகன் போர்த்தொழிலில் வல்லவன். பகைவர் களை அடுவதில் அவனினும் சிறந்தோர் இல்லை. உலகத்தில் நிகழ்ந்த பெரும் போர்களுள் மிகக் கொடிய போரென்று மூன்றைச் சொல் வார்கள். மகாபாரத யுத்தம், ராம ராவண யுத்தம், சூர சங்காரம் என்பன அவை. ஒன்றினைவிட ஒன்று பெரியது. பகைவர்களும் ஒரு வகையாரினும் மற்றவர் கொடியவர். போர் நிகழ்ந்த காலமும் ஒன்றைவிட ஒன்று நீண்டது. பாரத யுத்தம் 18 நாள் நடந்ததென்றும், ராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்ததென்றும், சூர சங்காரம் 18 வருஷங் கள் நடந்த தென்றும் கூறுவது வழக்கம். பதினெட் டாண்டு நிகழ்ந்த சூரனுடைய போரே பெரிது. சூரனும் மிக்க வலிமையை உடையவன். அவனோடு போர் புரிந்து வென்ற முருகன் பெருவீரன். யுத்தத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/160&oldid=643828" இலிருந்து மீள்விக்கப்பட்டது