பக்கம்:வழிகாட்டி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை - 159

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் அவன்; அப்படிப் பொருவதற்கு ஏற்ற வீரமும் இளமையும் உடையவன்.

செருவில் ஒருவ! ப்ொருவிறல் மள்ள! (போரில் ஒப்பில்லாத ஒருவனாக விளங்குபவனே! பொருகின்ற வெற்றியினையும் இளமையையும் உடையவனே)

பெரும்புகழாளன் முருகன் வேள்வி காவலன்; வேதப் பொருளாக இருப்பவன். அந்தணர்களது வேள்வியும் மறை வளமும் அவன் திருவருளால் இனிது நிலவும். அதனால் அவனுக்குப் 'பிராம்மணப் பிரியன்' என்ற திருநாமமும் உண்டு. வேதோபநிஷதங்களை ஆராய்ந்து ஞான நெற்றிக்கண் செலுத்தும் சிந்தை படைத்த அந்தணர்களுக்கு ஞானமே திருவுருவாக அமைந்த முருகனே செல்வம். 'வேதியர் வெறுக்கையும்' என்பது திருவகுப்பு.

உலகத்துப் பொருளையும் உயிர்த்தொகுதியின் இயல்பையும் இறைவன் தன்மையையும் உணர்ந்த வர்கள் மெய்ஞ்ஞானிகள். உண்மை உணர்வுடைய அவர்கள் உண்மையல்லாதவற்றைப் பேசமாட்டார்கள். உண்மையல்லாத செயலைச் செயலாக எண்ணமாட்டார் கள். எல்லாச் செயலுக்கும் ஆதிகாரனன் இறைவன் என்பதை உணர்ந்து அவனே எல்லா வினைக்கும் கர்த்தா என்று அறிவார்கள். எவன் ஒரு காரியத்தைத் திறம்படச் செய்வானோ அவனையே சொல்லாற் புகழ்தல் வேண்டும். அந்தப் புகழ்தான் உண்மையான புகழ். திருவள்ளுவர், 'இறைவன் பொருள்சேர் புகழ்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/161&oldid=643829" இலிருந்து மீள்விக்கப்பட்டது