பக்கம்:வழிகாட்டி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதி ர்சோலை 161

மாக அமைந்த இரண்டு ஆற்றல்களிலே, மேன்மேலும் இன்பத்தை ஆக்குவதற்கு மூலமான சக்தியாக இருப்பது காதல். உலக வாழ்வில் இன்பத்தையும் ஒற்றுமையை யும் குலைத்துத் துன்பத்தையும் குழப்பத்தையும் விளை விப்பது பகையுணர்ச்சி; அதைப் போக்கி அழித்துச் சாந் தியை நிலை நிறுத்துவது வீரம். குழப்பமடைந்த உலகில் அதனை நீக்கி அமைதியை உண்டாக்குவது வீரம். அந்த அமைதியிலே இன்பப்பயிர் விளைப்பது காதல். முன்னது புறத்தே நிகழ்வது; சுற்றிச் சூழ உள்ள களைகளைப் போக்கும் தொழில் போன்றது; அதனைப் புற மென்று வகுப்பர் தமிழர். பின்னது அகத்தே நிகழ்வது. உள்ளத்தின் உருக்கத்திலே அன்பு விளையும். அதனை அகம் என்று தமிழர் கூறுவர். ஆணும் பெண்ணுமாக இரு வேறு பகுதிப்பட்டு நிலவும் உலகில், ஆண் வீரம் மிக்குப் புறத்தே பகை கடிந்து மைந்தரேறாக விளங்கிப் பிறகு காதல்மிக்க மங்கை யுடன் அகத்தே இன்ப வாழ்வு நடத்துவான். உலகில் பகையுணர்ச்சி இருப்பின் உள்ளத்தே காதல் முகிழ்க் காது. வீடு இன்பத்தின் நிலைக்களமாக இருக்கவேண்டு மாயின் நாடு அமைதியாக இருக்க வேண்டும்.

வீரத்திற் சிறந்த முருகன் வேலை ஏந்தியிருக்கி றான். அதனைக் கொண்டு அவன் அடைந்த வெற் றிக்குக் கணக்கில்லை. மெய் வீரர்களுக்கு வெற்றியே செல்வம். முருகன் அந்தச் செல்வத்தில் நிரம்பியவன். வேல் பிடித்திருக்கும் திருக்கரம் எத்தனையோ வெற்றியைக் கண்டது. அந்த வெற்றியினால் வந்த செல்வம் அனைத்தையும் அந்தத் திருக்கரத்தினாலே தேவருக்கும் முனிவருக்கும் வழங்கி இன்புறுபவன் முருகன். அந்தத் திருக்கரத்துக்கு வெற்றியே செல்வம்:

வ.க.வ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/163&oldid=643831" இலிருந்து மீள்விக்கப்பட்டது