பக்கம்:வழிகாட்டி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வழிகாட்டி

வெற்றியாற் பெற்ற பொருளை ஈயும் வண்மையே

பெருஞ்செல்வம்.

வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! (வேல் பொருந்திய பெரிய கைகளால் அமைந்த

பெரிய செல்வத்தை உடையவனே)

கிரவுஞ்ச சங்காரன்

முருகன் கிரவுஞ்ச கிரியை வேலாலே பொடிபட அழித்த வெற்றியை உடையவன். மலையுருவாக எங்கும் பறந்து சென்ற கிரவுஞ்சாசுரனை வதைத்த இந்த வெற்றியைப் பழங்கால நூல்கள் பலபடப் பாராட்டும். குன்றம் எறிந்த குமரவேள் என்ற தொடர் உரைகளில் வழங்கும். முன்பு வெற்றிச் செல்வத்தை உடையவன் என்று சொன்னவர், உடனே அதற்கு உதாரணமாக, கிரவுஞ்ச மலையை அழித்த வெற்றி என்றும் குன்றாமல் இருப்பது என்று சொல்கிறார்.

அவன் ஒரு குன்றத்தைக் கொன்றாலும் மலைகளுக் கெல்லாம் தலைவன். ஆகாயத்தை முட்டி அளாவிய மலைகளையுடைய குறிஞ்சித் திணைக்குத் தெய்வம் அவன். "சேயோன் மேய மைவரை உலகமும்’ என்று முதல் திணையாகிய அதற்கு முருகனைத் தெய்வமாகக் கொண்டு போற்றும் தமிழ் மரபைத் தொல்காப்பியம் சொல்கிறது. -

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! (கிரவுஞ்ச மலையை அழித்த, என்றும் குறையாத வெற்றியையுடைய, வானத்தை முட்டும் உயர்ந்த மலை களையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரிமை பூண்டவனே)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/164&oldid=643833" இலிருந்து மீள்விக்கப்பட்டது