பக்கம்:வழிகாட்டி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை ->. 163

புலவர் தலைவன் முருகன் புலவர் தலைவன்; ஞானியருள் ஞானி. அவனைப் பலரும் புகழ்கின்றனர். சைவ வைணவ சமயத்தினரும் அவனைப் புகழ்கின்றனர். நல்ல மொழி களாலே புகழ்ந்து பாராட்டுகின்றனர். 'சங்கத் தமிழின் தலைமைப் புலவா என்றார் ஒரு புலவர். பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! (சாதியாலும் சமயத்தாலும் வேறுபட்ட பலரும் புகழும் நல்ல மொழிகளையுடைய, புலவர்களுக்குள் ஆண் சிங்கம் போன்ற தலைவனே)

'கல்வியால் மதம் பெற்ற யானை போன்ற புலவர் களுடைய செருக்கை அடக்கும் ஆண் சிங்கம் போன்ற வனே என்று உரை கூறுவார் நச்சினார்க்கினியர்.

பெருஞ்செல்வன் மக்கள் இம்மையிலே அடைகின்ற செல்வங்களுக் குள்ளே பல யாவருக்கும் எளிதிற் கிடைப்பன அல்ல. மறுமையாகிய சுவர்க்கமென்னும் செல்வமோ மிகவும் அரிது. முத்தியென்னும் பெரும்பேறாகிய செல்வம் அரி தினும் அரிது. அரிதிற் பெற வேண்டிய அமைதியை யுடைய அந்தப் பெரும் பொருளை உடையவன் முருகன்.

அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக! (அருமையாகப் பெறுதலாகிய முறையையுடைய பெரிய பொருளாகிய முத்திச் செல்வத்தையுடைய முருகனே! பெயர் - பொருள்.)

'எல்லோருக்கும் பெறுவதற்கு அரிய முறைமை யினையுடைய பெரிய பெயரைப் படைத்த முருகனே என்றும் பொருள் கொள்ளலாம். முருகன் என்ற திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/165&oldid=643836" இலிருந்து மீள்விக்கப்பட்டது