பக்கம்:வழிகாட்டி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வழிகாட்டி

நாமம் தனக்கேயுடையவன் அவன் என்ற குறிப்பை வெளிப்படுத்துவது இப்பொருள். 'சிவனெனும் பெயர் தனக்கேயுடைய செம்மேனியம்மான்' என்று தேவாரம் சொல்வது போன்றது. இது.

முருகு என்னும் சொல்லுக்கு மணம், இளமை, அழகு, தெய்வத்தன்மை முதலிய பல பொருள்கள் உண்டு. அவற்றை உடையவன் முருகன். என்றும் குன்றாத இளமையும் என்றும் அழியாத அழகும் உடையவனாக வடிவேற் பெருமான் இருப்பதால் அந்தப் பெயர் அவனுக்கே தனியுரிமையாயிற்று.

வள்ளல்

முருகன் திருவருளை விரும்பிச் செல்லும் புலவனுக்கு அவன் பெருமையையும் இருப்பிடத்தை யும் சொல்வது போதாது. அதோடு அவன் பெருஞ் செல்வன் என்பதையும் சொல்ல வேண்டும். அவன் பால் ஒன்றைப் பெறுவதே நோக்கமாகச் செல்பவன் புலவன். ஆதலின் அவனிடம் ப்ொருள் உண்டு என்பதைச் சொல்வாரைப்போலே, 'அவன் முக்தி யென்னும் பெருஞ்செல்வத்தை உடையவன்' என்றார். பெருஞ்செல்வம் உடையவனாக இருப்பினும், அதனைப் பிறருக்கு அளிக்கும் வண்மை உடையவன் தானா? அவ்வியல்பு இல்லையேல் புலவன் அங்கே சென்று பயன் இல்லை.

ஆம்; அவன் தன்னை விரும்பி வந்தவர்களுக்கு வேண்டியதை நிறையக் கொடுப்பவன். அப்படிக் கொடுப்பவன் என்பதை உலகமே சொல்கிறது. "இரப் பார்க்கொன் lவார்மேல் நிற்கும் புகழ்' என்பது திருக் குறள். அவன் தன்பால் உள்ள செல்வத்தை ஈந்து இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/166&oldid=643839" இலிருந்து மீள்விக்கப்பட்டது