பக்கம்:வழிகாட்டி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 165

பம் காண்பவனென்பதை அவனைப்பற்றி உலக முழு வதும் நிரம்பிய புகழ் விளக்கும். சாதாரணமான புகழ் அல்ல; பேரிசை.

நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள!

(தன்பால் விரும்பி வந்தவர்களுக்கு அவர் விரும்பியதைத் தந்து நிரம்ப நுகரச் செய்யும் பெரிய புகழை உடையவனே!)

அநாத ரக்ஷகன்

முருகன் கருணாநிதி; துணையின்றி அகதிகளாக அலந்துபோய் நின்றவர்களைப் பாதுகாக்கும் கடப்பாடு உடையவன், அநாத ரக்ஷகன்.

அவன் பொன்னாபரணங்களை அணிந்தவன்; செக்கச் சிவந்த திருமேனி படைத்தவன். -

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!

(துணையின்றி வருந்தியவர்களுக்கு அருள்புரியும், பொன்னாபரணங்களை அணிந்த சேயே!

சேய் - செந்நிறத்தை உடையவன்.)

அகல் மார்பன்

பல பல போர்களை வென்றவன் முருகன். அவன் திருமார்பு அகன்று விரிந்து அவன் பெருவீரன் என்பதை வெளியாக்குகிறது. மண்டுகின்ற அமர்களை முடித்து வென்று அடுகின்ற திருமார்பு அது. அந்த மார்பினாற் பெற்ற செல்வத்தைக் கொண்டு தன்பால் வரும் பரிசி லர்களைப் பாதுகாக்கும் வள்ளல் அவன்.

நெடிய உருவத்தை உடையவன் அவன். அந்த உருவத்தைக் கண்டாலே பகைவருக்கு அச்சம் உண்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/167&oldid=643844" இலிருந்து மீள்விக்கப்பட்டது