பக்கம்:வழிகாட்டி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வழிகாட்டி

மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்!

(மேல் நெருங்குகின்ற போர்களை முடித்து உன்னுடைய வென்று அடுகின்ற மார்பினாலே பரிசிலர் களை இரட்சிக்கின்ற பயங்கரமான நெடிய வேளே!

அகலம் - மார்பு உரு-அச்சம்.)

உருகெழு என்பதற்கு அழகிய உருவத்தையுடைய என்றும் பொருள் கொள்ளலாம்.

வீரத்துக்கு இருப்பிடமாக மார்பையும் சொல்லும் வழக்குப்பற்றி முருகனுடைய திருமார்பு பரிசிலரைக் காப்பாற்றுவதாகச் சொன்னார். இப்படிப் பிறரும் சொல்லியிருக்கிறார்கள்.

கொண்கானங் கிழானென்ற உபகாரியை மோசி கீரனார் என்பவர் பாராட்டுகிறார். அவன் பல பரிசிலர் களைப் பாதுகாப்பவன். பாணர்கள் தம்முடைய கையில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்திருப்பார்கள். அதற்கு மண்டை என்று பெயர். வறிய அந்த இசைப் புலவர்கள் அவன் கையை எதிர்பார்த்து நிற்பார்கள். இதே செய்தியைப் புலவர் வேறு வகையாகச் சொல்கி றார். வறுமையைப் பெற்ற யாழ்ப்புலவர்களுடைய பாத்திரங்கள் கொண்கானங் கிழவனுடைய மார்பை நோக்கி மலர்ந்தன என்று புகழ்கின்றார்.

"இலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க்

கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டார் அகலம் நோக்கின மலர்ந்தே."

(புறநானூறு, 155.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/168&oldid=643848" இலிருந்து மீள்விக்கப்பட்டது