பக்கம்:வழிகாட்டி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை ... 157

அவர்கள் கைப்பாத்திரம் அவன் மார்பை நோக்கி மலர்ந்தன என்றது, அவன் மார்பு வன்மையினாலே பெற்ற செல்வத்தை அவர்கள் பெறுவார்களாதலால், இதை உரையாசிரியர், 'மண்டை அகலம் நோக்கி மலர்ந்த என்ற கருத்து கொடுக்கும் பொருள் மார்பின் வலியான் உளதாமாகலின், அகலம் நோக்கின என்ற தாகக் கொள்க’ என்று விளக்கினார்.

அதுபோல இங்கே முருகன் வென்றாடு அகலத் தினால் பரிசிலரைத் தாங்குகிறான் என்றதற்கு, அந்த மார்பின் வலியாலே பெற்ற செல்வத்தை வழங்கித் தன்பால் வந்து குறை யிரக்கும் தேவர் முதலிய பரிசிலரைக் காப்பாற்றுவான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

'மண்டுடமர் கடந்தநின் வென்றாடகலத்துப் .ெ லம்பூட் சே எண்' என்று கூட்டி, மிக்குச் செல்சி போர்களை முடித்த வென்றடுகின்ற நினது மார்பிட பொன்னாற் செய்த பேரணிகலங்களை அை சேயென்க' என்று பொருள் உரைத்தார் நச்சி கினியர்.

'நசையுநர்க்கு ஆர்த்தும் செயல், தன்பால் வேண்டி வந்த அடியார்களுக்கு வீடுபேற்றைத் கருணையை விளக்குவது. அலந்தோர்க்கு அளி துணையற்று, வேண்டிக் கொள்ளும் திறமும் அநாதைகளை ரrவிக்கும் திறத்தைப் புலப்படுத் பரிசிலரைத் தாங்குவது, இந்திரன் முதலியே வேண்டிய செல்வங்களைத் தன் வீரச்சிறப்பால் ெ தரும் இயல்பை வெளியிடுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/169&oldid=643851" இலிருந்து மீள்விக்கப்பட்டது