பக்கம்:வழிகாட்டி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வழிகாட்டி

எம்பிரானுக்குத் தெரியும். "பயப்படாதே! நீ வருவாய் என்பதை நான் அறிவேன்' என்று உன்மேல் கொண்ட அன்போடு கலந்த நல்ல வார்த்தைகளை அவன் கூறி யருள்வான்.

ஈகையிற் சிறந்த வள்ளல் தன்பால் உள்ள பொருளை இரவலனுக்குக் கொடுப்பதில் இன்பம் அடைவான். அப்படியே முருகன் அடியவருக்கு அருள் வழங்குவதில் இன்பம் அடைபவன். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்னும் நான்கும் இன்றித் தருமம் செய்யவேண்டுமென்பது சான்றோர் கொள்கை. முருகன் அப்படித்தான் அருளை விநியோகம் செய்கிறான்.

அஞ்சல் ஒம்புமதி, அறிவல்நின் வரவென

அன்புடை நன்மொழி அளைஇ.

('அஞ்சுவதை விட்டுவிடு; உன் வரவை முன்பே அறிவேன்' என்று அன்புடைய நல்ல வார்த்தைகளைச் சொல்லி.)

பெறலரும் பரிசில்

அவனுடைய திவ்ய தரிசனமே ஆருயிருக்குப் பேரின்ப நுகர்ச்சியை அளிக்கும்; அவனுடைய இனிய மொழிகள் அமுதம்போல உதவும். அந்த அளவிலே புலவன், காணாத காட்சியும் அட்ையாத இன்பமும் அடைந்து விடுவான். ஆனால் அவன் 'செவ்வேற் சேய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு வந்தவன் ஆயிற்றே; என்றும் நிரந்தரமான இன்பத்தை விரும்பி யல்லவா வந்தான்? கண்டபொழுதிலே காட்சியாலும் வார்த்தைகளாலும் இன்புறச் செய்துவிட்டு, 'போய் வா' என்றால் போதுமா? இரவலனாகிய புலவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/178&oldid=643885" இலிருந்து மீள்விக்கப்பட்டது