பக்கம்:வழிகாட்டி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 175

தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழிஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி (தெய்வத்தன்மை அமைந்த வலிமை விளங்கும் திருவுருவத்தோடு ஆகாயத்தை அளாவிய உயரத்தை யுடைய அப்பெருமான், உனக்கு அருள்செய்யும் பொருட்டு அங்கே வந்து, காண்பாருக்கு வருத்தத்தைத் தரும் அந்த நெடிய உருவத்தை மறைத்துப் பழையதாக உள்ள தன் மணங்கமழும் தெய்வத்தன்மையும் இளமை யும் அழகுமுடைய வடிவத்தைக் காட்டி.

நிவப்பு - உயரம். அணங்கு - வருத்தம். தழிஇ - அடக்கிக் கொண்டு. நலம் - அழகு.)

அஞ்சலென்று அருளுதல்

இரவலன் குறையைக் கேட்பதற்கு முன்னே சென்று சொல்லும் தொண்டர்களையும், அவர் கூறுவ தற்கு முன்னே உணர்ந்து அருள்புரிய வரும் தலை வனையும் நக்கீரர் காட்டுகிறார். இரவலனிடம் அருள் பூண்டு, அவன் தன்னைக் கண்டு அஞ்சக்கூடாதென்று தன் உன்னத உருவத்தைக் குறைத்துக் கொண்டு அவன் கண்ணும் கருத்தும் குளிரும்படியான தன் இயற்கைத் திருமேனியோடு திருவாய் மலர்ந்தருள் செய்வான்.

'நாம் இப்பெருமான்பால் வந்தோமே; இவனை அணுகும் தகுதி நமக்கு இல்லையே! இவன்பால் என்ன கேட்டது? என்ற நினைவுகள் உனக்கு உண்டாகலாம். எல்லாப் பொறிகளையும் மயக்கும் முருகனது தரிசனத் தால் உனக்குப் பிரமிப்பும் பயமும் உண்டாகும். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/177&oldid=643881" இலிருந்து மீள்விக்கப்பட்டது