பக்கம்:வழிகாட்டி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வழிகாட்டி

அவசரம்?' என்று சீறி விழும் செல்வச் செருக்கர் உலகத்தில் இருக்கிறார்கள். ஆனால் பரிசிலரைத் தாங்கும் நெடுவேளாகிய முருகன், தன் அணுக்கத் தொண்டர் கூறுவதற்கு முன்னே, புலவனது வருகையை உணர்ந்திருக்கிறான்; அவனுக்கு அருள் செய்யும் திரு வுள்ளம் படைத்திருக்கிறான். -

அவன் உலகமெல்லாம் கடந்து நின்ற பெரியான், அவன் பேருருவம் உலகையே தன்னுள் அடக்கி யிருப்பது; தெய்வத்தன்மை வாய்ந்த அந்தப் பேருருவம் ஆகாயத்தை அளாவியிருக்கும். அத்தகைய உருவத் தோடு வரின் மக்கள் கண் கதுவ முடியுமா? பார்க்குமுன் பயமல்லவா உண்டாகிவிடும்? இது எம் பெரு மானுக்குத் தெரியும். அவன் தன் கருணையாலே, நமது விசுவரூபத்தைக் காணும் பக்குவம் இவனுக்கு இல்லை. அதைக் கண்டால் அஞ்சுவான். இவனுக்கு ஏற்ற முறையில் நாம் செல்லவேண்டும் என்று எண்ணி அச்சத்தைத் தரும் அந்தப் பேருருவத்தை அடக்கிக் கொள்வான். உலகில் எந்த நிலையில் இருப்பாரும், கண்ட மாத்திரத்திலே மனம் ஈடுபடும் அழகும் இளமையும் கொண்ட திருவுருவம் அவனுக்கென்றே அமைந்தது. மணமும் தெய்வத்தன்மையும் இளமையும் அழகும் ஒருங்கே அமைந்த அந்தப் பழைய திருவுருவத் தினாலேதான், முருகன் என்ற பெரியோரேத்தும் பெரும் பெயரை அவன் உடையவனானான். முருகு என்பது மணத்தைக் குறிக்கும்; தெய்வத் தன்மையைக் குறிக்கும்; இளமையையும் அழகையும் குறிக்கும். அந்த இளமைத் திருவுருவத்தோடு உன்னை வந்து அணுகித் தரிசனம் தருவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/176&oldid=643877" இலிருந்து மீள்விக்கப்பட்டது