பக்கம்:வழிகாட்டி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 173

பாராட்டினான். இனிய வார்த்தைகளாலும் நல்ல பயனுடைய வார்த்தைகளாலும் உன்னை மிக நன்றாகப் பல பல தோத்திரம் செய்து வந்திருக்கிறான்' என்று சொல்லி உன்னைப் பற்றி அவர்கள் முருகனிடம் எடுத்துக் கூறுவார்கள்.

குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமநின் வண்புகழ் நயத்தென இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி. (நீ நினைத்ததை உணர்ந்து உடனே வேறு பல உருவங்களையுடைய குறிய பல ஏவலாளர், விழா நடத்தும் களத்தில் சிறப்பு உண்டாகும்படியாகத் தோன்றி, இவன் இரங்கத்தக்கான்; அறிவு வாய்ந்த யாசகன்; நின் ஈகையால் வந்த புகழைக் கேட்டு விரும்பி இனியனவும் நல்லனவுமாகிய திருநாமங்களை நன்றாகப் பலபலவாகச் சொல்லித் துதித்துவந்தான், பெருமானே என்று சொல்ல, .

கூளியர் - ஏவலாளர். சாறு - விழா. முதுவாய் இரவலன் - அறிவு வாய்ந்த புலவன்.)

தரிசனம் தருதல் உடன் இருப்பவர்கள் சமயம் அறிந்து, சொல்ல லாமோ வேண்டாமோ என்று தாமே யோசித்து, முதலில் தம் உள்ளத்திலே கருணையை உண்டாக்கிக் கொண்டு, எப்படியோ எஜமானனிடம் வந்தவனது குறையை மெல்லச் சொன்னாலும், 'அதற்கு என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/175&oldid=643874" இலிருந்து மீள்விக்கப்பட்டது