பக்கம்:வழிகாட்டி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 . வழிகாட்டி

முருகனைச் சுற்றிலும் இருந்து அவனுக்குரிய பணி விடைகள் செய்து வாழும் ஏவலர் எப்படிப்பட்டவர், ஆண்டவனுக்கு உள்ள கருணை வேகத்தைக் காட்டிலும் அவர்களுக்குள்ள வேகம் அதிகம். நாலு அடியார்களை ஆண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாக்கினோம் என்று பெருமிதம் அடையும் இயல்பினர் அவர்கள். ஆகவே நீ உன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப் பதற்கு முன்பே, உன் விருப்பம் அவர்களுக்குத் தெரிந்து விடும். நீ உன் கருத்தைத் தெரிவிக்கும் ஆற்றல் இல்லாத வனாக இருந்தாலும் குற்றமில்லை. முருகனை நீ புகழ்ந்து துதித்த சொற்கள் அவர்களுக்கு மிக்க இன்பத்தை உண்டாக்கும். மனம் கனிந்து நீ சொல்லும் தோத்திரங்களும் உன் பணிவும் அவர்களுக்கு உன் உள்ளத்தைத் தெரிவித்துவிடும். அவர்கள் உன் கருத்தை உணர்ந்து கொள்வார்கள்.

அங்கே ஒருவர் இருவரல்ல, பலர் இருப்பார்கள். வேறு வேறு உருவத்தோடு இருப்பார்கள். அவர்கள் உன்பொருட்டு முருகனிடம் சென்று விண்ணப்பித்துக் கொள்வார்கள். விழா எடுக்கின்ற அந்தக் களத்திலே சிறப்புப் பெறும்படியாகச் சென்று முருகனுக்கு முன்னே நின்று உன் வருகையைத் தெரிவிப்பார்கள்.

'அவனைப் பார்த்தாலே இரக்கம் உண்டாகிறது. நல்ல பாத்திரம். உலகில் பிறரையெல்லாம் நாடாமல் நின்னை நோக்கி வந்தமையினால் அவன் பேரறிவு புலனாகிறது. அவன் அறிவு வாய்ந்தவன். நின் கருணையை யாசித்து வந்த இரவலன். பெருமானே, அவன் நீ பேரருள் புரிபவனென்ற வண்மைப் புகழைக் கேட்டிருப்பான். கேட்டு அந்தப் புகழை விரும்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/174&oldid=643870" இலிருந்து மீள்விக்கப்பட்டது