பக்கம்:வழிகாட்டி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 171

புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக்

குறித்தது மொழியா அளவை,

(உன் பெருமைகளை அளவிட்டு அறிதல் உலகத் தில் உள்ள உயிர்களுக்கு அருமையாக இருத்தலின், நான் நின் திருவடி தரிசனத்தின் பொருட்டு அதை நினைந்து வந்தேன். நின்னோடு ஒப்பார் இல்லாத ஞானமுடையவனே! என்று தொடங்கி நீ உள்ளத்தே கொண்ட எண்ணத்தைச் சொல்வதற்கு முன்னே..)

அணுக்கத் தொண்டர்

'முருகன் எப்படி இருப்பானோ? எங்கே இருப் பானோ? அவனை நாம் அணுக முடியுமோ. முடி யாதோ? தம் விண்ணப்பம் அவன் திருச்செவியில் ஏறுமோ, ஏறாதோ? என்றெல்லாம் கலங்க வேண் டாம். அடியாருக்கு அருள் செய்ய முருகன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகில் இருந்து ஏவல் செய்பவர்கள் அவனை நினைந்து வரும் அன்பர்களிடத்தில் மிக்க அன்பு பாராட்டுகிறவர்கள். நாயகன் கருணைக் கடலானால் அவர்கள் அக்கடலுக்கு மடைகளைப் போல் உதவுவார்கள்.

உலகத்தில் பணமும் பதவியும் படைத்த பெரிய வர்கள் பெரும்பாலும் இரக்கம் படைத்தவர்களாக இருப்பதில்லை. அப்படி இரக்கம் சிறிதளவு இருந் தாலும் அந்த இரக்கத்தினால் ஏழைகள் பயன் அடை யாதபடி, சூழ நிற்கும் சிநேகிதர்கள் செய்துவிடுவார்கள். இந்த இயல்பை நோக்கியே, "சுவாமி வரங்கொடுத் தாலும் பூசாரி வரங்கொடுக்கவில்லை' என்ற பழமொழி எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/173&oldid=643866" இலிருந்து மீள்விக்கப்பட்டது