பக்கம்:வழிகாட்டி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வழிகாட்டி

வேண்டுகோள்

இவ்வாறெல்லாம் பரவி ஏத்திப் பிறகு, 'அப்பனே, உன்னை அளவிட்டறிதல் உலகில் உள்ள சிற்றறி வுடைய உயிர்களுக்கு அரிது. நான் உன்னை அறிந்து புகழுமாறு எங்ங்னம்? உன் திருவடியை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு அதனையே நினைந்து வந்திருக்கின்றேன். ஒப்பார் இல்லாத ஞானத்தை உடையவனே என்று நீ சொல்வாயாக.

இறைவன் திருமுன்னர்ப் போனால் அவன் அடியைத் தான் பார்த்து வணங்க வேண்டும். எல்லாம் அறிந்த அவனுக்குமுன் சிற்றறிவுடைய உயிர் எம்மாத் திரம்? ஆகவே அவனை அறிந்து அவன் இருக்கும் இடத்தையும் அறிந்துவிட்டோம் என்ற நினைவற்று நின்றால்தான் அவன் அருள் வாய்க்கும். எல்லாம் அறிந்து தனக்கு ஒப்பார் ஒருவரும் இல்லாத புலமை யோனாகிய முருகனிடத்திலே, நின் திருவடி தரிசனத் தின் பொருட்டு வந்தேனென்றுதான் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி விண்ணப்பித்துக் கொள்ளும்போது அவன் முன் நின்று சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவன் எழுந்தருளியிருக்குமிடம் இது என்ற உறுதியான நினைவுடன் சென்று, அங்கே சொன்னால் போதும். உன் விருப்பம் இன்னதென்று வெளிப்படை யாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. அதற்கு முன்னே உனக்கு நன்மை உதயமாகும்.

நின்அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் நின்அடி உள்ளி வந்தனென், நின்னொடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/172&oldid=643863" இலிருந்து மீள்விக்கப்பட்டது