பக்கம்:வழிகாட்டி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 169

பொருந என்பதற்கு உவமிக்கப்படுபவனே என்றும் உரை கூறலாம். தனக்குப் பிறர் உவமையாதலின்றி, அழகுக்கும் வீரத்துக்கும் தன்னையே பிறருக்கு உபமான மாக எடுத்தோதும் பெருமை வாய்ந்தவன் முருகன்.

'கந்தனை அனையவர் கலைதெரி கழகம்' என்று கம்பரும் பிறரும் மைந்தருக்கு உவமையாக முருகனைக் கூறுவார்கள். 'குரிசில்' என்பதற்கு உபகாரியென்றும் பொருள் கொள்ளலாம். -

நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை யிலே சரவணபவனாக விளங்கியது முதல் முருகனது "பல திரு விளையாடல்களையும் இயல்புகளையும் உணர்த்தும் சொற்றொடர்களாலே முருகனைத் துதிக்கு மாறு நக்கீரர் அறிவுறுத்தினார். அவன் கருணையும், வீரமும், அழகும், ஈகையும், தலைமையும், கடவுள் தன்மையும் நிரம்பியவனென்பதைப் பல பல வகை யிலே விளக்கினார். இனி அவனிடம் சமர்ப்பிக்கும். வேண்டுகோளைச் சொல்கிறார்.

இவ்வாறு பலவிதம் நான் சொன்னவற்றில் அவனது பெருமை அடங்கிவிட்டது என்று எண்ணாதே. அவன் பெருமை கடலினும் பெரியது; பலர் புகழ்வது. அதில் யான் இப்போது நினைக்கும் அளவு இது. அதனை உனக்குச் சொன்னேன். யான் அறிந்த அளவிலே சொன்னபடி நீ முருகனை விடாமல் துதிப்பாயாக.

.....................^* * * * * * * * * * * * * * * * * * * * எனப்பல

யான்அறி ജ്ഞഖിങ്ങ ஏத்தி ஆனாது. (என்று பலவகை நான் அறிந்த அளவிலே சொல் வனவற்றை விடாமற் சொல்லி.

ஆனாது - அமையாமல்; விடாமல்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/171&oldid=643859" இலிருந்து மீள்விக்கப்பட்டது