பக்கம்:வழிகாட்டி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வழிகாட்டி

யாவற்றினும் சிறந்த, பெறுவதற்கரிய பரிசலாகிய வீடு பேற்றை வழங்குவான்.

விளிவின்று -அழிவின்றி. வளைஇய - வளைந்த, விழுமிய - மேலான நல்குமதி - அளிப்பான்.)

இந்த உலகத்திலே பேரின்பத்தை அவன் வழங்கு வான் என்று நக்கீரர் சொல்கிறார். ஜீவன் முத்தியென்று சொல்லும் நிலை அதுதான். “இத்தேகமொடு காண் பனோ என்று தாயுமானவர் ஏங்கி எதிர்ப்ார்க்கும் பரிசில் அது. உலகத்து ஒரு நீயாகத் தோன்ற என்பது, வீடு பெற்ற புலவனை உலகம் புகழும் என்பதைக் குறித்தது என்று கூறுவார் கூறலாம். ஆயினும், இவ்வுல கத்திலே பற்றற்று இறை யுணர்வில் திளைக்கும் ஆருயிருக்கு இங்கே முத்தி நிலை கைகூடுமென்பது சாத்திரங்களாலும் அநுபவத்தாலும் அறியப்படுவதால், நக்கீரர் கூறுவது அந்த ஜீவன்முத்தி நிலையையே என்று கொள்வதில் தவறில்லை.

சங்ககாலத்துப் புலவர்கள் ஜீவன் முத்தியைப் பற்றி அறிந்திருந்தார்களென்றே தெரிகிறது. மாங்குடி மருத னார் என்ற புலவர் தாம் பாடிய மதுரைக்காஞ்சியில் ஜீவன் முக்தரைப் பற்றிச் சொல்கிறார். “சிறந்த வேதம் விளங்கப் பாடி விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி உயர்நிலை உலகம் இவனின்று எய்தும் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற் பெரியோர்."

(மதுரைக் காஞ்சி, 468-73) r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/180&oldid=643892" இலிருந்து மீள்விக்கப்பட்டது