பக்கம்:வழிகாட்டி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை i.79

என்பது அப்பகுதி. அதர்வண வேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட வேதங்களைத் தமக்குப் பொருள் தெரியும்படி ஒதி, விழுமிய தலைமையோடு பொருந்தின யாகங்கள் முதலிய தொழில்களோடே சிலகாலம் பொருந்தி, நால்வகை நிலங்கள் அமர்ந்த உலகத்தே ஒன்றாகிய பிரமம் தாங்களேயாய் உயர்ந்த நிலைமையை யுடைய தேவருலகத்தை இவ்வுலகிலே நின்று சேரும், தருமத்தின் வழி ஒரு காலமும் தப்பாத, பல்லுயிர் கட்கும் அன்புடைத்தாகிய நெஞ்சாலே, சீவன் முத்தரா யிருப்பார் என்று இதற்கு நச்சினார்க்கினியர் பொருள் எழுதுகிறார். நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி’ என்று அங்கே உள்ள சொல்லமை தி யும், உலகத்து ஒரு நீயாகித் தோன்ற என்று இங்கே திருமுருகாற்றுப் படையில் உள்ள சொல் அமைதியும் ஒத்திருப்பதைக் காண்க.

'நன்றாய் ஞானம் கடந்துபோய்

நல்லிந் திரியம் எல்லாம்ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்

உலப்பி லதனை உணர்ந்துணர்ந்து சென்றாங்கு இன்பத் துன்பங்கள்

செற்றுக் களைந்து பசையற்றால் அன்றே அப்போ தேவீடாம்

அதுவே வீடு வீடாமே." என்று நம்மாழ்வார் கூறுவதிலும் இந்த ஜீவன் முத்தியைக் காணலாம்.

பழமுதிர்சோலையான் எதிர்வந்த புலவனுக்கு இது பெறலாம் என்று கூறி முடித்து, ஆற்றுப்படையையும் முடிக்கிறார் நக்கீரர். இறுதிப் பகுதியில், முருகன் அருள்செய்வான் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/181&oldid=643895" இலிருந்து மீள்விக்கப்பட்டது