பக்கம்:வழிகாட்டி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O வழிகாட்டி

வாய்பாட்டில், முருகனுக்கு அடையாகப் பழமுதிர் சோலை மலையாகிய ஆறாவது படைவீட்டை வைத்துச் சொல்லுகிறார். பெறலரும் பரிசில் நல்கு வன் என்றவர், அப்படி நல்குபவன் யார் என்பதற்கு விடையளிப்பாராகி, நல்குவான் என்பதற்கு எழுவா யாகப் பழமுதிர் சோலைமலை கிழவோனே என்று கூறி நிறைவுறுத்துகிறார். எத்தகைய பழமுதிர் சோலை, அதன் இயற்கை வளப்பத்தைச் சொல்லுகிறார்.

பழமுதிர் சோலைமலையில் பெரிய அருவி உண்டு. அது மலையின் உச்சியிலிருந்து வந்து நிலத்திற் பாய்கிறது. வரும் போது இடையில் அகப்பட்ட பொருள்களை உருட்டிக் கொண்டு வருகிறது. அதைத் தொடர்ந்து சென்றால் அந்த மலையின் வளப்பத்தை ஒருவாறு அளந்து அறிந்து விடலாம்; அங்குள்ள பூவையும் மரத்தையும் விலங்கையும் பறவையையும் கண்டுகளிக்கலாம்.

பேரருவிக்கு மூலம் சிறிய சிறிய அருவிகள். அவை களெல்லாம் மலையின் உச்சியில் வெவ்வேறாக ஓடி வருகின்றன. நெடுந்துரத்திலிருந்து பார்த்தால் வெள்ளைக் கொடிகள் காற்றிலே அசைவதுபோல அவை தோற்றும். அவைகளெல்லாம் ஒன்று சேர்ந்து பேரருவியாகப் பரிணமிக்கின்றன.

பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி. (பல சிற்றருவிகள் ஒருங்கே பல வெவ்வேறு துகிற் கொடிகளைப்போல வளைந்து அசைந்து.)

இயற்கைவளம் மிக்க மலையிலே அகில் விளை கிறது. சந்தனமரம் அடர்ந்து வளர்ந்திருக்கிறது. மூங்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/182&oldid=643899" இலிருந்து மீள்விக்கப்பட்டது