பக்கம்:வழிகாட்டி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 181

பல காலமாக வளர்ந்து முற்றியிருக்கிறது. அதன் கிளை நிறைய மலர் மலர்ந்திருக்கிறது. காற்றிலே அது அசைந்து அசைந்து ஆடுகிறது. ஆகாயத்தை அளாவிய சிகரங்களில் அங்கங்கே தேனிக்கள் பெரிய பெரிய தேனடைகளை வைத்திருக்கின்றன. செந்தேனை நிரம்ப உடைய அவை சூரிய மண்டலத்தைப்போலச் சிவப்பு வட்டமாகத் தோற்றுகின்றன. பலா மரங்கள் வளர்ந் திருக்கின்றன. சுரபுன்னையும் மலர்ந்து விளங்குகிறது.

மேலிருந்து அருவி வேகமாக வருகிறது. அகிலைப் பறித்து அதனை ஏற்றுக்கொண்டு வருகிறது. சந்தன மரத்தை அடியோடு பறித்து உருட்டுகிறது. பூவோடு மூங்கிலின் அசையும் கொம்ப்ை ஆட்டி அசைத்து மொட்டையாக்கி அதன் வேரைப் பறிக்கிறது. வானை அளாவி உயர்ந்த தாழ்வரைகளிலே ஈக்கள் தொகுத்து வைத்திருக்கின்ற தண்ணிய மணம் கமழ்ந்து விரிந்த தேனடைகளைச் சிதைக்கிறது. ஈரப்பலாவை மோதி அதிலிருந்து பல நல்ல பழங்கள் உடைந்து அவைக ளெல்லாம் தன்பால் விழுந்து கலக்கும்படி செய்கிறது. மலையுச்சியிலுள்ள சுரபுன்னையின் மலர்கள் அருவி யிலே உதிர்கின்றன. \

அகில்சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரற் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பருதியின் தொடுத்த தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல ஆசினி முதுகளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/183&oldid=643903" இலிருந்து மீள்விக்கப்பட்டது