பக்கம்:வழிகாட்டி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வழிகாட்டி

(அகிலைச் சுமந்து, சந்தன மரத்தை உருட்டி, சிறு மூங்கிலின் பூவுடைய அசைகின்ற கொம்பு பூவில்லா மல் தனிப்ப அதன் வேரைப் பிளந்து வானுலகத்தைத் தொடுகின்ற உயர்ந்த மலையில் சூரிய மண்டலத்தைப் போல ஈயால் வைக்கப்பட்ட தண்ணியவாய் மணக் கின்ற பரந்த தேன்கூடுகள் சிதைய, நல்ல பல வேர்ப் பலாவின் முற்றிய சுளை விழுந்து கலக்க, மேலே உள்ள சுரபுன்னை மரத்தின் வாசனைமிக்க மலர்கள் உதிர.

முழுமுதல் - அடிமரம். வேரல் - சிறுமூங்கில். பரிதி - சூரிய மண்டலம். இறால் - தேனடை. ஆசினி - ஈரப்பலா. கலாவ - கலக்க. நாகம் - சுரபுன்னைமரம்.)

மலையிலே உள்ள விலங்குகளையும் அந்த அருவி இயங்கச் செய்கிறது. குரங்குகளிலே பலவகை அங்கே உண்டு. கருங்குரங்குகளும் முகம் மாத்திரம் கறுப்பாக இருக்கும் முசுக்கலைகளும் அருவியின் வீச்சிலே அஞ்சி நடுங்குகின்றன. மலரைத் தெளித்தாற்போன்ற புள்ளி களையுடைய மத்தகத்தோடு பிடிகள் அங்கே உலாவு கின்றன. வேகமாக அருகி வரும்போது அதன் துளிகள் விர்விர்ரென்று வீச அவை மேலே படுவதனால் அந்தப் பெண் யானைகள் குளிரால் நடுங்குகின்றன.

யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி. (கருங்குரங்குகளோடு கரிய முகத்தையுடைய முசுக் கலைகள் நடுங்கவும், பூவைப்போன்ற புள்ளிகளை யுடைய மத்தகத்தைப் பெற்ற கரிய பெண் யானைகள் குளிர்ச்சி அடையவும் வீசி.

மா - கருமை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/184&oldid=643906" இலிருந்து மீள்விக்கப்பட்டது