பக்கம்:வழிகாட்டி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வழிகாட்டி

(வாழையின் அடிமரம் முறியவும், தென்னையின் பெரிய இளநீர்க்குலைகள் உதிரவும் தாக்கி, மிளகுக் கொடியின் கரிய காய்க்கொத்தானது சாயும்படியாக.

துமிய - ஓடிய, தாழை - தென்னை கறி - மிளகு, துணர் - கொத்து.)

அழகான புள்ளிகளையுடைய மயில்கள் மெத் தென்று நடந்து கூட்டம் கூட்டமாக உலவுகின்றன. அவை பலவும் ஒருங்கே இந்த அருவியின் ஆரவாரத் தைக் கேட்டு அஞ்சுகின்றன. காட்டுக் கோழிகளில் வலிமையையுடைய பெடைகள் அஞ்சி ஓடுகின்றன. காட்டுப் பன்றிகளும் ஒடுகின்றன. கரிய பனையின் உள்ளே இருக்கும் சிலாம்பைப் போன்ற கரிய நிறமும் உருவும் பெற்ற மயிரையும் வளைந்த அடியையும் உடைய கரடிகளும் ஒடுகின்றன. பன்றிகளும் கரடி களும் பெரிய பாறைகளினிடையே உள்ள குகைகளுக் குள்ளே புகுந்து கொம்பையுடைய காட்டுப்பசுவின் காளை மலையே அதிரும்படி முழங்குகின்றது.

பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டு ஆமா நல்ஏறு சிலைப்ப. (பொறிகளை மேலே உடையனவும் மெல்ல நடக்கும் நடையை உடையனவுமாகிய மயில்கள் பல ஒருங்கே அஞ்சவும், காட்டுக்கோழியின் வலிமையை யுடைய பெடை ஒடிப்போகவும், காட்டுப் பன்றியோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/186&oldid=643914" இலிருந்து மீள்விக்கப்பட்டது