பக்கம்:வழிகாட்டி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை 185

கரிய பனையின் உள்ளிட்டில் உள்ள புல்லிய சிலாம் பைப் போன்ற நிறம் பெற்ற மயிரையுடைய உடம் போடு கூடிய வளைந்த அடியைப் பெற்ற கரடிகள் பெரிய பாறையின் பிளப்பிலே உள்ள குகையிலே புகுந்து அடங்கவும், கரிய கொம்பையுடைய காட்டுப் பசுவின் நல்ல காளை முழங்கவும்.

வய - வலிமை. இரிய - ஒட வெளிறு - உள்ளே உள்ள சோறு. சாய் - சிலாம்பு. உளியம் - கரடி. அளை - குகை,

இப்படி மரங்களை அலைத்து விலங்குகளையும் பறவைகளையும் அச்சுறுத்தி அருவியானது மலையின் உச்சியிலிருந்து இடையறாமல் இழும் என்ற ஒசை யோடு வீழ்ந்துகொண்டே இருக்கிறது. இழுமென இழி தரும் அந்த அருவியையுடையது பழமுதிர் சோலை மலை. அதற்கு உரியவன் முருகன். முன்பு சொன்ன இடங்களிலே எழுந்தருளியிருப்பவனும் பழமுதிர் சோலைமலை கிழவோனுமாகிய முருகன் உனக்குப் பெறவரும் பரிசிலை நல்குவான்.

சேண்நின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலை கிழவோனே. (மலையின் உச்சியிலிருந்து இழுமென்ற ஓசை யோடு இறங்கி வருகின்ற அருவியையுடைய பழமுதிர் சோலை மலைக்கு உரியவனாகிய முருகன்.

இடையீடு இல்லாமல் தொடர்ந்து இனிமையாக ஒலிக்கும் ஒலியை இழுமென் ஒசை என்பர்.)

அருவிவளம் மிக்க மலையில் அடர்த்தியான மரங் களும் அந்த மரச் செறிவினாலே காடுகளும் அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/187&oldid=643917" இலிருந்து மீள்விக்கப்பட்டது