பக்கம்:வழிகாட்டி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.86 வழிகாட்டி

காடுகள் இருப்பதனால் விலங்குகளும் வளர்கின்றன. மலையின் வளப்பத்தை அருவியும் அகிலும் சந்தனமும் மூங்கிலும் வாழையும் தென்னையும் தெளிவிக்கின்றன. அவற்றின் செறிவை யூகமும் முசுக்கலையும் கேழலும் கரடியும் புலப்படுத்துகின்றன. அந்தக் காடுகளின் பரப்பைக் களிறும் பிடியும் காட்டுகின்றன. இத்தனை வளம் மிகுந்த மலையென்பது அதன் பெயராலே விளங்கும். பழம் முதிர்ந்த சோலைகளையுடைய மலை யென்ற பொருளை அப்பெயர் தெரிவிக்கின்றது.

ஆறாவது படைவீடாகிய பழமுதிர் சோலை மதுரைக்கு அருகில் உள்ள அழகர் மலையாகும். சோலை மலையென்றும் திருமாலிருஞ்சோலை மலை யென்றும் அது வழங்கப்பெறும். இப்போது அழகருக் குரிய கோயில் அங்கு இருக்கிறது. அதோடு முருகனுக் கும் கோயில் இருந்ததற்குரிய அடையாளங்கள் அங்கே உள்ளன என்பர்.*

முருகனுடைய பல்வேறு நிலைகளும் செயல் களும் அவனை வழிபடும் மக்களின் பல்வேறு இயல்பு களும் கூறிய நக்கீரர், அவன்பால் பிறர் பிறர் வேண்டும் பொருள்களிையாசிக்கும்படிக் கூறவில்லை. "நின் திரு வடியை அடைந்தேன்' என்று சொன்னாலே போதும் என்று சொல்கிறார். முருகன் பல திறப்பட்ட மனநிலை உடையவர்களுக்கு ஏற்றபடி அவரவர்களுக்குரியவற்றை அருளும் கருணை உடையவன். அவன்பால் பெறும் பரிசில்களுள் வீடுபேறுதான் சிறந்தது. அறிவுடைய

+

மலையின் மேல் முருகன் கோயில் ஒன்றை நிறுவிச் சில ஆண்டுகளாக வழிபட்டு வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/188&oldid=643921" இலிருந்து மீள்விக்கப்பட்டது