பக்கம்:வழிகாட்டி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 191

2. திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுஆழ் வரிதுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கிற் கடுநடைக் 80 கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந்து அன்ன வேழமேல் கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப 85 நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் மனன்நேர்பு எழுதரு வாள்நிற முருகனே: 90 மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரம்கொடுத் தன்றே; ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ 95 அந்தணர் வேள்விஓர்க் கும்மே, ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏம்.உற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே, ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே; ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந் தன்றே; ஆங்கம் மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின், ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/193&oldid=643939" இலிருந்து மீள்விக்கப்பட்டது