பக்கம்:வழிகாட்டி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19C

வழிகாட்டி

உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா 55

நினம்தின் வாயள் துணங்கை தூங்க, இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுனர் நல்வலம் அடங்கக் கவிழ்இனர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து ୫୦ எய்யா நல்இசைச் செவ்வேற் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவுநீ நயந்தனை ஆயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப 85 இன்னே பெறுதிநீ முன்னிய வினையே செருப்புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை துங்கப் பொருநர்த் தேய்த்த போர்அரு வாயில் திருவீற் றிருந்த தீதுதிர் நியமத்து 70 மாடமலி மறுகிற் கூடற் குடவயின், இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி ஏற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75 அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/192&oldid=643935" இலிருந்து மீள்விக்கப்பட்டது