பக்கம்:வழிகாட்டி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 189

செங்கால் வெட்சித் சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத் தூஇதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25 துவர முடித்த துகள்அறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30 வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35 வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெரியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் 40 சூரர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன், பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் 45 சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல் உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் குர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதிற் பினர்மோட்டு 5Q

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/191&oldid=643932" இலிருந்து மீள்விக்கப்பட்டது