பக்கம்:வழிகாட்டி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

வழிகாட்டி

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண்சே எய் மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் எனப்பல யான்அறி அளவையின் ஏத்தி ஆனது நின்அளந்து அறிதல் மன்உயிர்க்கு அருமையின் நின்அடி உள்ளி வந்தனென் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக்

குறித்தது மொழியா அளவைக் குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி அஞ்சல் ஒம்புமதி அறிவல்நின் வரவென அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய பெறல்அரும் பரிசில் நல்குமதி, பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு

275

28O

285

290

295

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/200&oldid=643967" இலிருந்து மீள்விக்கப்பட்டது