பக்கம்:வழிகாட்டி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 199

விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல 300 ஆசினி முதுகளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று 305 நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் 310

கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு ஆமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்று 315

இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/201&oldid=643970" இலிருந்து மீள்விக்கப்பட்டது